நாகப்பட்டினத்தில் அரியவகை ஆலிவ்ரிட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் போலீசார்.!

0 2030

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரையில் வனத்துறை பொரிப்பகம் மூலம் பொரிக்கப்பட்ட அரியவகை இனமான ஆலிவ்ரிட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வில் போலீசார் ஈடுபட்டனர்.

இனப் பெருக்க காலத்தில் கடற்கரை மணல் திட்டுகளில் ஆலிவ்ரிட்லி வகை ஆமைகள் விட்ட முட்டைகளை சேகரித்த வனத்துறையினர் அதை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்தனர்.

ஏறத்தாழ 14 ஆயிரம் முட்டைகள் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது 375 முட்டைகள் பொரித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆமைக் குஞ்சுகளை மீண்டும் கடலில் விடும் நிகழ்வில் திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments