பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்.!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் சொந்த கட்சியிலிருந்தும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
முஸ்லீம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியான பிபிபி ஆகிய கட்சிகளை சேர்ந்த சுமார் 100 எம்பிக்கள் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கடந்த மார்ச் 8 ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
பாகிஸ்தானுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பணவீக்கத்துக்கும் இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என்று எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமது அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தளபதியுடன் இம்ரான் கான் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Comments