ரஷ்ய எல்லையில் சீன ராணுவம் நிற்பது போன்ற புகைப்படம் வைரல் - புகைப்படம் உண்மையல்ல என சீனா மறுப்பு.!
ரஷ்ய எல்லையில் தங்கள் வீரர்கள் இருப்பது போன்று இணையதளங்களில் உலா வரும் புகைப்படம் உண்மையல்ல என சீனா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு இடையே ராணுவம் மற்றும் பொருளுதவி வழங்குமாறு சீனாவிடம் ரஷ்யா கேட்டதாக வெளியான செய்தியை சீனா மறுத்தது.
இந்நிலையில் ரஷ்ய எல்லையில் நவீன ஆயுதங்கள், டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் சீன ராணுவம் அணிவகுத்து நிற்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. ரஷ்யாவுக்கு எந்த படைபலத்தையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ள சீனா, புகைப்படங்கள் உண்மையல்ல என மறுத்துள்ளது.
சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படம் 2021ஆம் ஆண்டு மே மாதம் Xinjiang மாகாணத்தில் நடந்த போர் பயிற்சியின் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
Comments