காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

0 1757
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த தனது விளைநிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்த விவசாயி, அதில் தாமே சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தளவராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி, தாம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டிருந்தார். நள்ளிரவில் விளைநிலத்துக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள், பயிரை அழித்து நாசம் செய்து வந்துள்ளன. அதனைக் கட்டுப்படுத்த நிலத்தைச் சுற்றி ராமசாமி மின்வேலி அமைத்துள்ளார்.

வியாழக்கிழமை நள்ளிரவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்ற ராமசாமி, வாய்க்காலில் கால் இடறி, மின்வேலி மீதே விழுந்திருக்கிறார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சட்டவிரோத மின்வேலிகள் இதுபோன்ற உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் வேளாண் துறை அதிகாரிகள், மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சோலார் மின் வேலிகளை அரசு மானியத்துடன் அமைக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments