மாநில அரசின் கடன் சுமை அதிகரிப்பது கவலை அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழக பட்ஜெட்டில் கல்விக்கான திட்டங்களை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அதிகரிக்கும் கடன்சுமை கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறைக்கு அறிவித்துள்ள சில திட்டங்கள் வரவேற்கத் தக்கவை எனத் தெரிவித்துள்ளார். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத் தக்கதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
நலவாழ்வுத்துறை ஒதுக்கீடு, பொது வழங்கல் திட்டத்துக்கான மானியம் ஆகியன குறைக்கப்பட்டிருப்பது மக்களைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Comments