தமிழக பொது பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட் போல் உள்ளது - அண்ணாமலை

0 2921

தமிழக பொது பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட் போல் உள்ளது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

2022-2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, அம்ருத் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை சூட்டி தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது எனவும், பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments