கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்ற இளம்பெண் கைது

0 2367
கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்ற இளம்பெண் கைது

சென்னயில் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு போதை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த இளம்பெண் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடம்பாக்கத்தில் போதைப்பொருள் தொடர்பாக சோதனை நடத்திய போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில், அவர்களிடம் இருந்து ஏராளமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொறியல் பட்டதாரியான ராஜேஸ்வரி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில், போதை மாத்திரை விற்பனைக்கு ராஜேஸ்வரி முக்கிய நபராக செயல்பட்டு வந்ததாகவும், பப்ஜி விளையாட்டில் அறிமுகமான நபர் உள்ளிட்டோருடன் இணைந்து டெல்லியில் இருந்து அதனை வரவழைத்து விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இவர்கள் வாடிக்கையாளர்களை சமூக வலைதளம் மூலமாக அணுகி மாத்திரைகளை விற்றுவந்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments