பட்டப்பகலில் வீடு ஒன்றில் புகுந்து சேவல்களை திருடிச்சென்ற திருட்டு ஆசாமிகள் கைது

0 1401
பட்டப்பகலில் வீடு ஒன்றில் புகுந்து சேவல்களை திருடிச்சென்ற திருட்டு ஆசாமிகள் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பட்டப்பகலில் வீடு ஒன்றில் புகுந்து சேவல்களை திருடிக்கொண்டு, மொபட் வண்டியில் ஏறி இருவர் தப்பிச்செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன.

சரவணாநகர் பகுதியை சேர்ந்த பூக்கடை வியாபாரியான சரவணகுமார், தனது வீட்டின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து நாட்டு சேவல்களை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அருண்குமாரும் அவரது தாயாரும் பூக்கடைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டிற்கு முன்பாக வந்து நோட்டமிட்ட இருவர் உள்ளே புகுந்து 2 சேவல்களை பைக்குள் போட்டு எடுத்து வந்து, தங்கள் மொபெட் வண்டியில் ஏறி விறுவிறுவென அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த காட்சிகள் அருண்குமார் அப்பகுதியில் பொருத்தி வைத்திருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்ததையடுத்து காங்கேயம் போலீசாரிடம் காட்சிகளை ஒப்படைத்து அவர் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் களிமேடு பகுதியை சேர்ந்த திருட்டு ஆசாமிகளான கந்தசாமி , டேவிட் மனோகரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments