பங்குனி உத்தர திருவிழா ; தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

0 1995
பங்குனி உத்தர திருவிழா ; தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

பங்குனி உத்தர திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்ற நிலையில்,  திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

 மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி சுந்தராஜபெருமாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் எழுந்தருள செப்பு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும்,காவடி எடுத்தும் அலகு குத்தியும், மொட்டை அடித்தும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments