சீனாவில் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு - பல்வேறு நகரங்களில் தொற்று பரிசோதனை தீவிரம்
சீனாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் தொற்று பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் தற்காலிக பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், மையங்களுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே குளிருக்கு மத்தியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
பாதிப்பு அதிகரித்து காணப்படும் ஜுலின் உள்ளிட்ட மாகாணங்களில் தற்காலிக மருத்துவமனை கட்டும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, சீனாவில் புதிதாக 2 ஆயிரத்து 461 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
Comments