தமிழக பட்ஜெட் 2022 - 2023 தாக்கல்..!

0 8792

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் 

தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்

அதிமுக எம்எல்ஏக்களின் அமளிக்கு இடையே தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்

இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம்

கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றன

கொரோனா பெருந்தொற்றின் 2ஆவது மற்றும் 3ஆவது அலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது

கொரோனா காலத்தில் நிதிச்சுமை அதிகமாக இருந்தபோதும் நிதி நிர்வாகத்தால் திறம்பட சமாளித்தோம்

பட்ஜெட் தாக்கலின்போது அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு

தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது

தீர்க்கமான நடவடிக்கையால் அரசின் வருவாய் பற்றாக்குறை, 4.16%லிருந்து, 3.08%ஆக குறைய உள்ளது

திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது இன்னும் முழுமையாக முடியவில்லை

தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்

தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது

வரும் நிதியாண்டு பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.7000 கோடி குறைகிறது

உக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும்

சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் வழக்கம்போல் எந்த தடைகளும் இன்றி செயல்படுத்தப்படும்

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது

"முதல்வரின் முகவரி" என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், தமிழ்நாடு அரசு ரூ.20,000 கோடி இழப்பினை எதிர்கொள்ள நேரிடும்

image

தமிழ் மொழியின் தொன்மையையும், செம்மையையும் போற்றிட, பிற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய நடவடிக்கை

image

தமிழ் வேர் சொற்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி வளத்தின் புகழ்பரப்ப மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்

"அகரமுதலி" திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடைபெறும்

தாய்மொழி கல்வியே சிறந்த கல்விமுறை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

அரசு சாரா பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்

தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள்

image

விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்

அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நவீன நுட்பத்தில் நிலங்களை அளவீடும் செய்யும் வகையில், ரோவர் எந்திரங்களை வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்வழிக்கல்வியை ஊக்குவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சமூக ஊடகங்களில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

சமூக ஊடகங்களில் தவறான பதிவுகளை தடுக்க, சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்

image

காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

image

வானிலையை நவீன நுட்பத்துடன் துல்லியமாக கணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

image

சுய உதவிக்குழுக்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு

நீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க நடவடிக்கை

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு

நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை

"பிரசித்தி பெற்ற பல்கலையில் சேர ஊக்குவிப்பு"

புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்

"தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டம்"

தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

"6 மாவட்டங்களில் ரூ.36 கோடியில் நூலகங்கள்"

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்

"150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்பு"

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகள்

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்

மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.817 கோடி

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

 "உக்ரைன் ரிட்டர்ன் தமிழக மாணவர்களுக்கு உதவி"

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள தமிழக மாணவர்களின் கல்விக்காக அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்

"அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000"

அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு, மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்

image

காஞ்சி புற்றுநோய் மருத்துவமனை மேம்படுத்தப்படும்

காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்

சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

செங்கல்பட்டு: சமூக மேம்பாட்டு மையம்

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்

விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினருக்கு(ST), 1000 புதிய வீடுகள், ரூ.50 கோடியில் கட்டித்தரப்படும்

பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு

வழிபாட்டு தலங்கள் புனரமைக்க நிதி

தொன்மையான, சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களை புனரமைப்புக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு

ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1906 கோடி

தமிழ்நாட்டில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1906 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

மாணவர்கள் விடுதிகளை மேம்படுத்த சிறப்பு குழு

மாணவர்கள் விடுதிகளை மேம்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும்

நூலகங்கள் மேம்பாடு - உயர்மட்டக்குழு அமைப்பு

தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும்

மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டம்

மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு ரூ.4848 கோடி நிதி ஒதுக்கீடு

எம்எல்ஏ தொகுதி மேம்பாடு - ரூ.705 கோடி

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு

அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி ஒதுக்கீடு

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமான அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி நிதி ஒதுக்கீடு

நகரங்களில் 500 புதிய பசுமை பூங்காக்கள்

நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கும் வகையில் 500 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும்

புதிய 6 மாநகராட்சிகளுக்கு ரூ.60 கோடி

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு

6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள்

தமிழ்நாட்டில் 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

உதகை சிறப்பு திட்டங்களுக்கு ரூ.10 கோடி

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு

அ.ம.தி-2க்கு ரூ.1455 கோடி ஒதுக்கீடு

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2க்கு ரூ.1455 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, 2657 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்

பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது

சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5770 கோடி நிதி ஒதுக்கீடு

காட்டுப்பாக்கம் சந்திப்பில் ரூ.322 கோடியில் மேம்பாலம்

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் சந்திப்பில் ரூ.322 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்

நெடுஞ்சாலைதுறைக்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.18,218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

500 மின்சார பேருந்துகள் கொள்வனவு.!

தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக, 500 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும்

ரூ.5375 கோடியில் பேருந்துகள் நவீன மயம்.!

மின்சார பேருந்துகள் வாங்கவும், பேருந்துகள் நவீன மயமாக்கலுக்காகவும் ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு

2213 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

500 மின்சார பேருந்துகள் நீங்கலாக, 2,213 புதிய டீசல் பேருந்துகள் வாங்கப்படும்

ஐடிஐ & பாலிடெக்னிக் மேம்பாடு: ரூ.2877 கோடி

தமிழ்நாட்டில் ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட 761 தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.2877 கோடியில் சிறப்புத் திட்டம்

MSME மூலதன முதலீட்டுக்கு ரூ.300 கோடி

தமிழ்நாட்டின் சிறு, குறு, தொழில் நலத்துறையின் மூலதன முதலீட்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

5 மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள்

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

கோயம்புத்தூர், வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்

புதிய தொழிற்பூங்காக்கள் மூலம், ரூ.50,000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஏற்றுமதி நிறுவன கட்டமைப்பு: ரூ.100 கோடி

ஏற்றுமதி நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

பழம்பெரும் கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

மீஞ்சூர்-வண்டலூர் ரிங் ரோடு "டெவலப்மெண்ட் காரிடர்"

மீஞ்சூர் - வண்டலூர் இடையிலான வெளிவட்டச் சாலை டெவலப்மெண்ட் காரிடராக மேம்படுத்தப்படும்

அறநிலையத்துறைக்கு ரூ.340.80 கோடி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.340.80 கோடி ஒதுக்கீடு

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது - நிதியமைச்சர்

தீயணைப்புத்துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு

தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு

ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி ஒதுக்கீடு

சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.4,816 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1,461 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1,461 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க நிதி

விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கும் திட்டத்திற்கு ரூ.200கோடி ஒதுக்கீடு

அணைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

தமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.3,384 கோடி ஒதுக்கீடு

டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80கோடி ஒதுக்கீடு

வள்ளலார் பல்லுயிர் காப்பகம் அமைப்பு

வள்ளலார் பல்லுயிர் காப்பக திட்டத்திற்கு ரூ.20கோடி ஒதுக்கீடு

வரையாடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டம்

வனப்பகுதிகளில் வரையாடுகளை பாதுகாக்கும் சிறப்பு திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.10கோடி ஒதுக்கீடு

அரசுப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்

ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் அரசுப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்

அரசுப்பள்ளிகளை நவீனமயமாக்க, பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.250கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்களுடன் ரூ.7ஆயிரம் கோடி செலவில் அரசுப்பள்ளிகள் மேம்படுத்தப்படும்

பள்ளிக்கல்வித்துறை - ரூ.36,000 கோடி

பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.36,000 கோடி ஒதுக்கீடு

பொது விநியோக திட்டத்திற்கு ரூ.7,500கோடி

பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7,500கோடி ஒதுக்கீடு

மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.1,019 கோடி

மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.17,901 கோடி

19 மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளை தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த ரூ.1,019 கோடி ஒதுக்கீடு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி ஒதுக்கீடு

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தை மேம்படுத்த ரூ.40கோடி ஒதுக்கீடு

முதலமைச்சர் காப்பீடு திட்டம் - ரூ.1,547கோடி

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547கோடி

உயர்கல்வி உறுதி திட்டத்திற்கு நிதி

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்திற்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு

குழந்தை வளர்ப்பு திட்டம் - ரூ.2,542கோடி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,542கோடி ஒதுக்கீடு

இலவச சைக்கிள் வழங்க ரூ.162கோடி

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.162கோடி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ.808கோடி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.808கோடி ஒதுக்கீடு

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு

சமத்துவபுரங்கள் மேம்படுத்த ரூ.190கோடி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 149 சமத்துவபுரங்கள் ரூ.190கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்

முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்கள் ரூ.190கோடி செலவில் சீரமைக்கப்படும்

ஊரக வேலைவாய்ப்பு திட்டம் - ரூ.2,800கோடி

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500கோடி

சென்னையை மேம்படுத்தும் சிங்கார சென்னை 2.0திட்டத்திற்கு ரூ.500கோடி

image

குடிநீர் இணைப்பு - ரூ.3,000கோடி

குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு

கலைஞர் நகர்ப்புற மேம்பாடு - ரூ.1,000கோடி

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு

கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளின் மேம்பாட்டிற்கு தலா ரூ.10கோடி ஒதுக்கீடு

பிரதமர் வீடு திட்டம் - ரூ.3,700கோடி

பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700கோடி ஒதுக்கீடு

இ.சி.ஆரில் 6 வழிச்சாலைக்கு ரூ.135கோடி

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.135கோடி மதிப்பில் ஆறுவழிச்சாலை அமைக்கப்படும்

தரைப்பாலங்கள் மேம்படுத்தப்படும்

தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

மகளிர் இலவச பேருந்து திட்டம் - ரூ.1,520கோடி

மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்திற்கு ரூ.1,520கோடி போக்குவரத்துத்துறைக்கு மானியமாக ஒதுக்கீடு

image

மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் திட்டத்திற்கு மானியமாக ரூ.928கோடி ஒதுக்கிடு

மின் பகிர்மான இழப்பீட்டை ஈடு செய்ய நிதி

தமிழ்நாடு மின் பகிர்மான கழக இழப்பீடுகளை ஈடு செய்ய ரூ.13,108கோடி ஒதுக்கீடு

நுகர்வோர் மின்கட்டண மானியத்திற்கு ரூ.9,379கோடி ஒதுக்கீடு

மின்கட்டண மானியமாக ரூ.9,379கோடியை அரசு வழங்கும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் புத்தொழில் மையம்

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75கோடி செலவில் மாநில புத்தொழில் மையம் அமைக்கப்படும்

கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்

கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும்

தொழில்நுட்ப மையம் அமைப்பு

சென்னையில் ரூ.54.61கோடி மதிப்பில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்

சுற்றுலாத்துறைக்கு ரூ.246கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்த ரூ.246கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருச்சி, ராமநாதபுரம் மாவடங்களில் தொகுப்பு சுற்றுலா பயணங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்

தனியார் பங்களிப்புடன் தொகுப்பு சுற்றுலா பயணங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு

வீட்டுவசதித்துறைக்கு ரூ.8,700 கோடி

தமிழக வீட்டுவசதித்துறைக்கு ரூ.8,700கோடி ஒதுக்கீடு

அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ.19,000கோடி ஒதுக்கீடு

சொத்து மேலாண்மை மென்பொருள் உருவாக்கம்

அரசுத்துறைகளின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை கண்காணிக்க, சொத்து மேலாண்மை மென்பொருள் உருவாக்கப்படும்

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.79கோடி

கொரோனா பாதித்து உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ரூ.79கோடி ஒதுக்கீடு

நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

காவிரி நீர் வடிநிலப்பகுதிகளை சீரமைக்க ரூ.3,384கோடி நிதி ஒதுக்கீடு

ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ரூ.2,787கோடி ஒதுக்கீடு

டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80கோடி ஒதுக்கீடு

ஊழல் தடுப்பு துறை மேம்படுத்தப்படும்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இதுவரை இல்லாத அளவுக்கு மேம்படுத்தப்படும்

நேர்மையான ஆட்சி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த மேம்படுத்தப்படும்

 விரைவில் மகளிர் உரிமைத்தொகை திட்டம்

மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தின் தகுதியான பயனாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது

நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும் பொழுது மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்

பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான தரவுகள் சேமிக்கப்படுகின்றன - நிதியமைச்சர்

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும்  மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments