உக்ரைன் மீது ஜோ பைடனின் கவனம் திரும்பிய போதும் சீனா மீதான கண்காணிப்பை இழக்கவில்லை - அமெரிக்க அதிகாரிகள்
உக்ரைன் மீது ஜோ பைடனின் கவனம் திரும்பிய போதும் சீனா மீதான கண்காணிப்பை இழக்கவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் போரில் சீன அதிபர் சீ ஜின்பிங்கின் பங்கு என்ன என்று கண்காணித்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது.
ஆசியா தொடர்பான தமது வெளியுறவுக் கொள்கையை ஜோ பைடன் இறுதி வடிவம் கொடுத்து வருகிறார் .இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ போட்டியாளரான சீனாவை எதிர்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
சீனா புதினின் ராணுவ நடவடிக்கையை ஆதரித்து வருவதும் அமெரிக்காவின் கண்காணிப்பை அதிகரிக்க காரணமாகி உள்ளது.
சீனா அமெரிக்காவுக்கு ஆதரவாக இல்லையென்றாலும் சரி, ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக இருக்கக் கூடாது என்பதே இப்போது ஜோ பைடனின் இலக்காக உள்ளது. அதே போன்று அமெரிக்காவின் டாலர்களையும் தொழில்நுட்பத்திறன்களையும் இழக்க சீனா விரும்பவில்லை.
Comments