2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்காளதேசம் இடையில் ரயில் சேவை!
ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, வங்காளதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து வரும் 26ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் 26ஆம் தேதி முதல் மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேற்கு வங்கம் ஜல்பைகுரியில் , இருந்து டாக்கா செல்லும் மிதாலி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான பணிகளை தொடங்குமாறு வடகிழக்கு எல்லையோர ரயில்வேக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Comments