நாடு முழுவதும் இன்று ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்!

0 2118
நாடு முழுவதும் இன்று ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் இன்றும் நாளையும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  வண்ணப் பொடிகள் தூவப்பட்டு காட்சிக்குக் குளுமையைத் தர, காற்றில் ஹோலி ரே என்ற உற்சாகக் குரல்களும் கலந்து ஒலிக்கின்றன.

ஹோலிகை என்ற அரக்கியை கண்ணன் அழித்ததாகக் கூறப்படும் நாளை, ஹோலிப் பண்டிகையாக வடமாநிலங்களில் கொண்டாடுகின்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்பு போல, ஹோலிப் பண்டிகைக்கு சிறப்பு சேர்ப்பது வண்ணங்கள் தாம். சாதிமத பேதமின்றி யாரும் எவர்மீதும் வண்ணம் பூசலாம் என்பதால் மத நல்லிணக்கத்தைப் போற்றும் பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது.

வண்ணங்களின் திருநாளாம் ஹோலிப் பண்டிகையை அரசியல் தலைவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் இன்று கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்

சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோலிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

கனவுகள் கருப்பு வெள்ளையில் இருந்தாலும், நினைவுலகம் வண்ணங்களால் ஜொலிப்பவை. வண்ணமயமான வாழ்க்கையை வண்ணமயமாகவே காணும் உற்சாகம் இந்த பண்டிகையில் பரவலாக காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY