முதுநிலை பயிலாமல் பிஎச்.டி., படிப்பில் சேரும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் - பல்கலைக்கழக மானியக்குழு
இனி முதுநிலை பட்டம் இல்லாமல் 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் முடித்த உடன் பி.எச்டி படிப்பில் சேரலாம் என பல்கலைக்கழக மானியக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உயர்கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மூன்று ஆண்டு கால இளநிலை படிப்புகளுடன் விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால படிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், 4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமென்றாலும், படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, பின்னர் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனை நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும், தொலைதூரக் கல்வி முறையிலும் 4 ஆண்டுகால இளநிலை படிப்பை படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
Comments