யாரேனும் இலஞ்சம் கேட்டால் வீடியோ, ஆடியோவாக பதிவு செய்து இலஞ்சப் புகார் வாட்ஸ் ஆப் எண்ணுக்குப் புகார் அளிக்கலாம் - பகவந்த் மான்

0 2190

இலஞ்சம், ஊழல் குறித்துப் புகார் அளிக்கத் தியாகிகள் நாளில் வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப் போவதாகப் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23ஆம் நாள் பஞ்சாபில் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இலஞ்சம், ஊழல் குறித்துப் பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ் ஆப் எண் தியாகிகள் நாளில் அறிவிக்கப்படும் எனப் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலர்கள் யாரேனும் இலஞ்சம் கேட்டால் கொடுக்க மறுத்துவிட்டு வீடியோ ஆடியோ பதிவில் அந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்குப் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பகவந்த் மான் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments