இஸ்ரேலில் 2 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.!

0 2077

இஸ்ரேலில் 2 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரு திரிபுகள் ஒன்றிணைந்து புதிய வகை வைரசாக உருமாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பென் குரியன் விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மாதிரிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாறுபட்ட திரிபு இன்னும் உலகம் முழுவதும் கண்டறியப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments