நகராட்சி எல்லைக்குள் இயங்கும் 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நிதின் கட்காரியிடம், அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்.!

0 2307

தமிழ்நாட்டில் நகராட்சி எல்லைக்குள் இயங்கும் 5 சுங்கச்சாவடிகளை அகற்றவும், உயர்மட்ட சாலைகள் அமைக்கக்கோரியும் அமைச்சர் எ.வ.வேலு, மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் வலியுறுத்தினார்.

டெல்லியில் நிதின் கட்காரியை சந்தித்த அவர், செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான சாலையினை 8 வழித்தடமாக அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

சென்னை - தடா சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை 6 வழித்தட உயர்மட்ட சாலையும், தாம்பரம் - செங்கல்பட்டு வரையிலான உயர்மட்ட சாலையும் அமைக்க எ.வ.வேலு வலியுறுத்தினார்.

மேலும், சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூரில் சுங்கச்சாவடிகளை அகற்றவும் நிதின் கட்காரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY