அரசுப்பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை கைது செய்த போலீசார்.!
சேலத்தில் இருந்து கோவை சென்ற அரசுப்பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை காட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயது இளம்பெண் கோவையில் உள்ள குரூப் தேர்வு பயிற்சி மையத்தில் படிக்க செல்வதற்காக சேலத்தில் இருந்து அரசுப்பேருந்தில் பயணித்துள்ளார்.
வழியில் பேருந்து நடத்துனரான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பூவேந்திரன், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் காட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து நடத்துனர் பூவேந்திரனை கைது செய்த போலீசார், அவரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments