சென்னை அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் பாடத்திட்டம் மாற்றம் குறித்து ஆலோசனை.!
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செயலாளர் கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாடத்திட்டத்தை மாற்றியமைக்க 90 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பாடத்திட்டமாக வடிவமைப்பது குறித்து கருத்தரங்கில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் பொன்முடி, 25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.
மேலும், படிப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு என மூன்றும் ஒரு சேர வரும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Comments