திருவள்ளூரில் மதுபோதையில் அடகுக் கடை உரிமையாளரை தாக்கிய ரவுடி.!

0 1202

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே மதுபோதையில் அடகு கடைக்குள் புகுந்த ரவுடி ஒருவன், அடகுக் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த சம்பந்தம் என்ற அந்த ரவுடி, மதுபோதை தலைக்கேறி சாலையில் சென்றுக் கொண்டிருந்த பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளான்.

பிறகு, அப்பகுதியில் இருந்த பிரதாப் ராம் என்பவரது அடகு கடைக்குள் அத்துமீறி புகுந்த அவன், அடகுக் கடையின் ஷட்டரை இழுத்து மூடி மற்றொரு வாசல் வழியாக உள்ளே சென்று கடை உரிமையாளரிடம் தகராறு செய்ததோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளான்.

இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், பிரதாப் ராம் அளித்த புகாரின் பேரில், ரவுடி சம்பந்தத்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments