உக்ரைனின் மரியுபோல் நகரில் தியேட்டர் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல என ரஷ்யா விளக்கம்

0 2078

உக்ரைனின் மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது குண்டுவீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலில் மரியுபோல் நகரில் மட்டும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருக்கும் சூழலில், அங்குள்ள மக்கள் தியேட்டர் ஒன்றில் பாதுகாப்பாக தஞ்சமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், தியேட்டர் மீது வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தியேட்டர் முழுவதும் உருக்குலைந்த நிலையில், அங்கிருந்த மக்களின் நிலை என்ன ஆனது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே, தியேட்டரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என உக்ரைன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ரஷ்யா அதனை மறுத்துள்ளது.

மேலும், உக்ரைனிய போராளிகளான அசோவ் பட்டாலியன் அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ஏற்கனவே உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக வெளியேறும் அந்தநாட்டு மக்களை போராளிகள் குழு தடுப்பதாக ஏற்கனவே ரஷ்யா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments