கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்துவிட்டதனால் பாகிஸ்தான் அரசு கவிழும் சூழல்?
கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்துவிட்டதனால் பாகிஸ்தான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் பதவி விலக நெருக்குதல் அதிகரித்துள்ளது.
இம்ரான் கான் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்திலும் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆளும் நான்கு முக்கியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இப்போது இம்ரான் கான் மீது இம்மாத இறுதிக்குள் நம்பிக்கை வாக்கு கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை போன்றவற்றில் மிகவும் தவறான முடிவுகளை எடுத்துள்ளதாக இம்ரான் கான் மீது கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
Comments