2 ஆண்டுகளுக்கு பிறகு புனேயில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை

0 1687

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புனேயில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை துவங்க உள்ளது. வரும் 27-ஆம் தேதி வழக்கமான விமான போக்குவரத்துக்கு அனுமதி அளித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட புனே - துபாய் இடையிலான விமான சேவை மீண்டும் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா காலத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து புனே - ஷார்ஜா சிறப்பு விமான சேவை வரும் 26-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments