ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலநடுக்கம்… சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை
ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின், வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடலோர பகுதி, டோக்கியோ மற்றும் ஹொன்சு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தால் சுமார் 20 லட்சம் வீடுகளுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. புகுஷிமா கடலோர பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக ஹொன்சு தீவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல், பாகிஸ்தானின் ஸ்கார்டு பகுதி மற்றும் இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியிலும் சிறிது நேரம் நிலநடுக்கம் உணரப்பட்டது.
Comments