ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தம் - மத்திய அமைச்சர்
கொரோனாவால் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் வழங்கும் திட்டமில்லை என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் இழந்த ரயில்வேத் துறையின் வருவாயை ஈடுகட்ட மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்ட சலுகைகளை தொடரும் எண்ணம் தற்போது இல்லை என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அஸ்வனி வைஷ்ணவ், ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட 53 சலுகைகளில் நோயாளிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் 15 சலுகைகளை தவிர்த்து மற்ற அனைத்தையும் நிறுத்துவதாக தெரிவித்தார்.
Comments