சுங்கக் கட்டணம் செலுத்தக் கூறிய சுங்கச்சாவடி மேலாளர் மீது தாக்குதல் -பெண் உட்பட 5 பேர் கைது

0 2087

ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி சுங்கசாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பல், மேலாளரை சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செங்கப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக, கோவையிலிருந்து சேலத்தை நோக்கிச் சென்ற கார் ஒன்று வந்துள்ளது. காரில் பயணித்த நபர், தான் மனித உரிமைக் கழகத்தின் மாநில தலைவர் என்று கூறி சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது.

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் காரை அனுப்ப முடியாது எனக்கூறிய சுங்கச் சாவடி மேலாளர், இரும்பு தடுப்புகளை அமைத்து காரை போகவிடாமல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த பயணிகள், கீழே இறங்கி மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சுங்கச்சாவடியில் இருந்த பிற ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், மேலாளரை தாக்கிய பெண் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments