மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா- விமரிசையாக நடைபெற்ற அறுபத்து மூவர் வீதி உலா

0 1294

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் 8 ம் நாளையொட்டி அறுபத்து மூவர் வீதி உலா விமரிசையாக நடைபெற்றது.

63 நாயன்மார்களின் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றப்பட்டு 16 கால் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

நாயன்மார்கள் பல்லக்குக்கு முன்பாக மயிலாப்பூர் காவல் தெய்வம் கோலவிழி அம்மன், விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர் மற்றும் முண்டககண்ணியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர்.

பல்வேறு இடங்களில் இருந்தும் சிவனடியார்களும் சிவ பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை ஒட்டி மயிலாப்பூரை சேர்ந்தவர்கள் பக்தர்களுக்கு உணவு வழங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments