சுற்றுலாப்பயணிகள் சவாரி சென்று கொண்டிருந்த ஜீப்பை துரத்திய யானை-பதறவைக்கும் காட்சிகள்

0 2550

நீலகிரி முதுமலை வன எல்லையையொட்டி அமைந்துள்ள கர்நாடக மாநில பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் சவாரி சென்று கொண்டிருந்த அம்மாநில வனத்துறைக்கு சொந்தமான ஜீப்-ஐ யானை ஒன்று வேகமாக துரத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன.

நேற்று மாலையில் சுற்றுலாப்பயணிகள் 4 பேர் பந்திப்பூர் வனப்பகுதிக்குள் ஜீப்பில் சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதிக்கு வந்த யானை ஒன்று, ஜீப்-ஐ துரத்த தொடங்கியது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், சாதூர்யமாக வாகனத்தை நீண்ட தூரம் பின்னோக்கி ஓட்டிச்சென்று தப்பியதால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments