வாழ்க்கையில் ஏற்படும் சிறு தோல்விகளால் தற்கொலை செய்யக்கூடாது-மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை
வாழ்க்கையில் ஏற்படும் சிறு தோல்விகள் மற்றும் பின்னடைவுகளால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
மே மாதம் பள்ளி இறுதி தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றிய சைலேந்திர பாபு, திடீரென குழந்தைகள் உயிரை மாய்த்து கொள்வதால் தங்கள் பெற்றோர் அடையும் துயரத்தை பற்றி அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.
மாணவர்கள் மனதில் தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 1098 உதவி மையத்தை அழைத்து ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தினார்.
Comments