சீர்காழி அருகே ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற கோயில் சிலைகள் மீட்பு-குருக்கள் கைது

0 3579

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற 2 கோயில் சிலைகளை மீட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோயில் குருக்கள் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்திலுள்ள கோயில் சிலைகள் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நெம்மேலி அ.மி.விசாலாட்சி விஸ்வநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து கருவறையில் அம்மன் சிலைக்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி உலோக சிலைகள் மீட்கப்பட்டன.

இது தொடர்பாக நெம்மேலி கிராமத்தை சேர்ந்த கோயில் குருக்கள் சூர்யமூர்த்தி கைது செய்துள்ள போலீசார், அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த சனீஸ்வரன் வெள்ளி கவசம், ஸ்ரீகாத்தாயி அம்மன் வெள்ளி கவசம் ஆகியவற்றையும் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments