இந்தியாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா.!
ரஷ்யத் தலைமைக்கு ஆதரவளிப்பது உக்ரைன் மீதான அதன் படையெடுப்புக்கு ஆதரவளிப்பது போலாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கை விரைவில் கையொப்பமாக உள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ரஷ்யத் தலைமைக்கு ஆதரவளிப்பது உக்ரைன் மீதான அதன் படையெடுப்பை ஆதரிப்பது போலாகும் என்பதால் வரலாற்றில் எந்தப் பக்கத்தில் நிற்க வேண்டும் என இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பொருளாதாரத் தடைகளை இந்தியா மதிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தடைகளை மீறிய செயல் ஆகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments