பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை - எதிர்கட்சிகள் போராட்டம்
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ள நிலையில், அதிபர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சிகள் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடியை இலங்கை நாளுக்கு நாள் சந்தித்து வருகிறது. இதையடுத்து, பஸ் கட்டணம் முதல் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்ததுள்ளதால், அந்நாட்டு மக்களை வறுமையின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இலங்கை அரசு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி ஐக்கிய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments