ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்காவுக்கு ரஷ்ய அரசு பதிலடி

0 2828

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ் உள்ளிட்ட 13 பேரின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது ரஷ்யா.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உள்ளிட்டோர் மீதும் பொருளாதார தடையை ரஷ்யா அறிவித்துள்ளது.  உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்திருந்தது.

ரஷ்யாவின் இறக்குமதிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டு 370 ரஷ்ய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அபராதமும் விதித்தது. இதற்கு பதிலடித் தரும் விதமாக பொருளாதாரத் தடையை ரஷ்யா அறிவித்துள்ளது.ஆயினும் அமெரிக்காவுடனான ராஜாங்க தொடர்புகள் தொடர்வதாக ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments