கோர்பவாக்ஸ் தடுப்பூசி போடும் திட்டம் இன்று துவக்கம்.!
தமிழகத்தில் 12வயது முதல் 14வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, கோர்பவாக்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று துவங்குகிறது.
ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோர்பவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது மட்டுமின்றி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் வெளிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு 21 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசியின் ஒரு வயலில் 20 நபர்களுக்கு செலுத்தும் வகையில் டோஸ் இருக்கும் எனவும், ஒரு நபருக்கு .05மில்லி அளவு டோஸ் மருந்து மட்டுமே செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 2வது தவணை தடுப்பூசியை 28 நாட்களுக்கு பிறகு செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கோர்பவாக்ஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.
Comments