பெட்ரோல் விலை உயர்வால் போக்குவரத்துக்கு குதிரையை பயன்படுத்தும் கல்லூரி ஊழியர்..
எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு, மகாராஷ்டிராவில், கல்லூரி ஆய்வக உதவியாளர் ஒருவர் குதிரையை வாங்கி தனது போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.
அவுரங்காபாத்தை சேர்ந்த ஷைக் யூசுப் என்பவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது இருசக்கர வாகனம் பழுதானதுடன், பொது போக்குவரத்தும் முடங்கியதால், 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குதிரையை விலைக்கு வாங்கியுள்ளார். ஜிகார் என்ற பெயரிடப்பட்டுள்ள குதிரையில் தான் யூசுப், தினமும் பணியாற்றும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.
பெட்ரோல் விலை உயரும் சூழலில், குதிரையில் பயணிப்பதே சரியானதாக இருக்கும் என்று யூசுப் தெரிவித்தார்.
Comments