குமாரபாளையத்தில் 6 சாயப் பட்டறைகள் இடித்து அகற்றம்.!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய 6 சாய பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் இடித்து அகற்றினர்.
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இயங்கும் சாய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை அனுமதி பெறாமல் இயங்கி வந்ததுடன், சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல், நேரடியாக கால்வாய்கள் மூலம் காவிரி ஆற்றில் கலந்துவிட்டதால் குடிநீர் மாசுபடுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அவ்வப்போது சாயக்கழிவுகள் சுத்திகரிக்கப்படுகின்றவா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் உத்தரவின் பேரில் 6 சாயப்பட்டறைகளும் இடித்து அகற்றப்பட்டன.
Comments