கன்னியாகுமரியில் தவணைத் தொகையை கட்டத் தவறியதால் நள்ளிரவில் தனியார் பள்ளி வாகனங்களைத் திருட முயற்சி?
கன்னியாகுமரி அருகே 75 லட்ச ரூபாய் தவணை பாக்கிகாக நிதி நிறுவனம் ஒன்று இரவோடு இரவாக தனியார் பள்ளிக்குள் புகுந்து வாகனங்களைத் எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நித்திரவிளை - கிறிஸ்துராஜபுரம் பகுதியில் ஜெயமாதா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6 வாகனங்கள் மாணவர்களை அழைத்து வர இயக்கப்பட்டு வருகின்றன.
செவ்வாய்கிழமை காலை வழக்கம்போல் வாகனங்களை எடுக்க ஓட்டுநர்கள் வந்தபோது 6 வாகனங்களில் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒன்று காணாமல் போயிருந்தது.
மற்ற வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேதமாகி சிதறி நின்றன. விசாரணையில் அந்த 6 வாகனங்களையும் வாங்குவதற்கு நிதியுதவி அளித்த சோழா பினான்ஸ் நிதி நிறுவனத்தினர் அவற்றை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.
75 லட்ச ரூபாய் வரையிலான தவணை பாக்கியை கட்டத் தவறியதால் வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதாகவும் ஆனால் ஒரு வாகனத்தை மட்டுமே எடுத்துச் செல்ல முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments