இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவி..!
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், 34 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரோபோடிக் கருவி அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக அறுவை சிகிச்சை அரங்கு 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் கருவி மனித கைகள் போன்று நான்கு கைகள் கொண்டுள்ளது.
மருத்துவர்கள் ஒரு திரை முன் அமர்ந்திருப்பார்கள். ரோபோவில் இருக்கும் கேமரா மூலம் நோயாளியின் உறுப்புகள் அந்த திரையில் மருத்துவருக்கு தெரியும்.
மருத்துவர் நேரடியாக அறுவை சிகிச்சை செய்வது போல தன் கைகளை அசைப்பார். அதே போல ரோபோ நோயாளிக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்யும். இந்த கருவியை முதலமைச்சர் பார்வையிட்டார்.
இந்த கருவியை வேறு இடத்திலிருந்தும் மருத்துவர்கள் இயக்க முடியும்.
Comments