உக்ரைனுக்கு பயணமாகும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்..
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு நேரில் ஆதரவு அளிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு செல்கின்றனர்.
ரஷ்ய படைகள் உக்ரைனின் மத்திய கிவ் பகுதியை நெருங்கி வருவதோடு, குடியிருப்புகளில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் போலந்து, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு செல்கின்றனர்.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் எப்போதும் உதவியாக இருக்கும் தெரியப்படுத்தும் வகையில், மூன்று நாட்டு பிரதமர்களும் உக்ரைனுக்கு நேரில் செல்கின்றனர்.
போர் உக்கிரமடையும் சூழலில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Comments