ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்.. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

0 1830
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள கங்காதர ஈஸ்வரர் கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள கங்காதர ஈஸ்வரர் கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு  மூலவருக்கும், அன்னபூரணி அம்மனுக்கும் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் திருத்தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வரப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments