திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட விழா கோலாகலம்.! பிரம்மாண்ட ஆழித்தேரை இறைமுழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
உலக பிரசித்திப்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் தியாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் புடைசூழ, அஜபா நடனத்துடன் தியாகராஜர் ஆழித்தேருக்கு எழுந்தருளினார்.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் சுமார் 300 டன் எடை, 96 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான ஆழித்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து இறை முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
ஆழி தேரோட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சேகர் பாபு, மூர்த்தி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
Comments