உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யாவைச் சேர்ந்த 12 முக்கிய ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

0 2210
உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யாவைச் சேர்ந்த 12 முக்கிய ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யாவைச் சேர்ந்த 12 முக்கிய ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

மரியுபோல் அருகே நடந்த சண்டையில் 31 வயதான கேப்டன் அலெக்ஸி குளுஷ்சாக் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRUவின் உயர் அதிகாரி உள்பட 3 முக்கிய ஜெனரல்கள் உள்பட 12 தளபதிகளும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராணுவ நடவடிக்கையின் ரகசியம் காரணமாகஅதிகாரிகள் மரணம் குறித்த விபரத்தை வெளியிட முடியாது என ரஷ்யத் தரப்பு தெவித்துள்ளது.

12 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ள நிலையில், 500 பேர் மட்டுமே போரில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments