சட்டசபையில் நிதானத்தை இழந்து கோபத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் நிதீஷ் குமார்

0 2769
சட்டசபையில் நிதானத்தை இழந்து கோபத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் நிதீஷ் குமார்

காவல்துறையினருடனான மோதல் குறித்த விவகாரத்தில் சபாநாயகர் விஜய் குமார் சின்காவிற்கு கண்டனம் தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சட்டசபையில் நிதானத்தை இழந்து கோபத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த மாதம் அம்மாநிலத்தின் லக்கிசராய் பகுதியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படவில்லை என போலீசார் சிலரை கைது செய்தனர்.

சபாநாயகரின் தொகுதியில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், போலீசாருடன் அவர் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் வைத்து முதலமைச்சரிடம் சபாநாயகர் தொடர்ந்து எழுப்பியுள்ளார்.

இதனை அடுத்து கோபமாக பேசிய நிதிஷ் குமார், சபாநாயகர் அரசியலமைப்பு விதிகளை மீறுவதாகவும், இந்த விவகாரத்தை தினசரி எழுப்புவது நியாமில்லை என்றும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments