விமான நிலைய வளாகத்தில் கிர்பானை வைத்திருக்க சீக்கிய ஊழியர்களுக்கு அனுமதி

0 2632
விமான நிலைய வளாகத்தில் கிர்பானை வைத்திருக்க சீக்கிய ஊழியர்களுக்கு அனுமதி

விமானப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் சீக்கிய ஊழியர்கள் விமான நிலைய வளாகத்திற்குள் கிர்பானை எடுத்துச் செல்ல மீண்டும் அனுமதிக்கப்படுவதாக விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சீக்கியர்கள் தங்கள் மத நம்பிக்கையின்படி கிர்பான் எனப்படும் சிறிய கத்தியை அணிந்திருப்பது வழக்கம். இந்நிலையில், மார்ச் 4ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கிர்பானை சீக்கியப் பயணிகள் மட்டுமே விமான நிலையத்திலும், உள்நாட்டு விமானத்திலும் எடுத்துச் செல்ல முடியும் என்றும், கத்தியின் நீளம் 6 அங்குலத்திற்கும், கைப்பிடியின் நீளம் 3 அங்குலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், விமான நிலையத்தில் பணிபுரியும் சீக்கியர்கள் கிர்பானை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், முந்தைய உத்தரவில் திருத்தம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments