நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11ல் நிறைவடைந்த நிலையில், ஒருமாத இடைவெளிக்குப் பின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தலைமையில் மாநிலங்களவை கூட்டமும், ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூட்டமும் தொடங்கின. ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டும் துணை மானியக் கோரிக்கைகளையும் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், உக்ரைன் போர், அங்கிருந்து இந்தியர்களை மீட்டது ஆகியன குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இரு அவைகளிலும் விளக்கமளிக்க உள்ளார்.
Comments