தேசியப் பங்குச்சந்தை முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ராவை 14 நாள் சிறையில் வைக்க உத்தரவு..! வீட்டு உணவு வழங்க அனுமதி மறுப்பு
தேசியப் பங்குச்சந்தை முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம், அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதிக்க மறுத்துவிட்டது.
தேசியப் பங்குச்சந்தை நிலவரங்களைத் தரகு நிறுவனங்கள் அறிந்துகொள்ள அதன் சர்வரில் இருந்து கோ லொக்கேசன் வழங்கியதில் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிந்தது. இந்த வழக்கில் மார்ச் 6 அன்று கைது செய்யப்பட்ட சித்ராவை 7 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சித்ராவுக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி மறுத்த நீதிபதி, சிறையில் வழங்கப்படும் உணவைத் தான் பலமுறை உண்டுள்ளதாகவும் அது நன்றாகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments