மாணவர்களிடம் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை - பள்ளிக் கல்வித்துறை
அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
ஒரு குழந்தையின் சாதியைக் கேட்பதற்கும், அக்குழந்தை சார்ந்த வகுப்பைக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது எனவும், அதன் அடிப்படையில் மாணவர்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களா, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களா, பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களா அல்லது சிறுபான்மையினரா அல்லது முற்பட்ட வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கான பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தத் தகவல் கேட்கப்படுகிறது என விளக்கமளித்துள்ளது.
Comments