கோயம்பத்தூரில் கோயில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனம்.!
கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற கோவில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூலூர் கணியூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
திருவிழாவில் பங்கேற்ற நடனக்குழுவினர் கொங்கு பகுதியின் புகழ்பெற்ற வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடனத்தை ஆடினர். அவர்களுடன் சேர்ந்து எஸ்.பி.வேலுமணியும் நடனமாடினார்.
Comments