இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்... ரிக்டர் அளவு கோலில் 6.3ஆக பதிவு

0 2404

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியதில் கட்டடங்கள் குலுங்கின. சுமத்ரா தீவில் இருந்து 168 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கதால் பெரியளவில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நில நடுக்கப் பகுதியில் குடியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்டை நாடான பிலிப்பைன்சையும் நில நடுக்கம் தாக்கியதால், குடியிருப்புகளை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். லஸ்சன் ((Luzon)) தீவில் உள்ள மோராங்கில்((Morong)) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலி 6 புள்ளி 4 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments